விருதுகள்

விருதுகள்

2017 ஜனவரி 24 அன்று புதுதில்லியில் நடைபெற்ற தேசிய பெண் குழந்தைகள் தின விழாவின் போது, சிறப்பாக இத்திட்டத்தினை செயல்படுத்தியமைக்காக மாவட்ட ஆட்சியர், கடலூர் அவர்களுக்கு மாண்புமிகு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களால் சிறப்பான சமூக ஈடுபாட்டிற்கான விருது வழங்கிப் பாராட்டப்பட்டது.

இத்திட்டத்திற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்து வழிநடத்தி கண்காணித்து திட்ட இலக்குகளை எய்திட தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக 2019 ஆம் ஆண்டுக்கான பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்ப்பிப்போம் தேசிய விருது தமிழ்நாட்டிற்கு 24.01.2019 அன்று வழங்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டு பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை அதிகப்படுத்தியமைக்காகவும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காகவும் மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர் அவர்களால் உலக மகளிர் தினம் 08, மார்ச் 2019 அன்று நாரி சக்தி புரஸ்கார் என்னும் தேசிய விருது தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக சிறந்த சமூக ஈடுபாட்டிற்கான தேசிய விருது – 2019 ஐ பெற்றது.

தொடர்ந்து 4 ஆண்டுகளாக குழந்தை பிறப்பு பாலின விகிதம் முன்னேற்றியமைக்காக நாமக்கல் மாவட்டம் தேசிய விருது -2019 ஐ பெற்றது.

மக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிறந்த முறையில் கொண்டு சென்றமைக்காக திருவள்ளூர் மாவட்டம் தேசிய விருது -2019 ஐ பெற்றது.