கைம்பெண்கள் , கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதிர் கன்னிகள் உள்ளிட்ட நலிவுற்ற பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், அவர்களுக்கு தேவையான திட்டங்களை உருவாக்குவதன் மூலம் அவர்களுக்கு கல்வி , சுகாதாரம், வேலை வாய்ப்பு , சிறப்பு சுய உதவிக் குழு உருவாக்கம் , திறன் பயிற்சி அளித்தல் போன்ற வாய்ப்புகளை அளித்து சமுதாயத்தில் அவர்கள் பாதுகாப்புடனும் கண்ணியத்துடனும் வாழ உறுதி செய்திடவும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியம், தமிழ்நாடு அரசால் (அரசாணை (நிலை) எண்: 56, சந & ம உ துறை நாள்: 02.09.2022) அமைக்கப்பட்டது.
தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி,சுகாதாரம், வேலைவாய்பு, சிறப்பு சுயஉதவிக்குழுக்கள் அமைப்பது,தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் 02.09.2022 அன்று உருவாக்கி ஆணையிடப்பட்டுள்ளது.
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியமானது மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்களை தலைவராகக் கொண்டு 10 அலுவல்சார் மற்றும் 14 அலுவல்சாரா உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
வாரியத்தின் முதல் கூட்டம் 16.05.2023 அன்று மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் - திட்டங்கள் குறித்த கையேடு -
உறுப்பினர் செயலர்,
தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்,
கலச மகால் முதல் தளம்,
சேப்பாக்கம், சென்னை - 600 005.
தொலைபேசி எண் : 044-28590804 / 28599188.
மின்னஞ்சல் முகவரி : tnwdwwb@gmail.com
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |




















